Unmai Oru NaL - Lingaa

உண்மை ஒரு நாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா நீயடா

பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே



கலங்காதே கரையாதே

ராமனும் அழுதான் தர்மனும் அழுதான்
நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை

சிரித்து வரும் சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள் உண்டு
உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு
பொன்னாடை போர்த்து விட்டு

உன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில் ஒளிந்து நிற்கும் 
பூ நாகம் உண்டு

பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளதை வீழ்த்திவிட முடியாது

உண்மை ஒரு நாள் ...

சுட்டாலும் சங்கு நிற்கும் 
எப்போதும்
 வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் 
மேன்மக்கள் தானே
கேட்டாலும் நம் தலைவன் 
எப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் 
வீழாது தானே
பொன்னோடு மண் 
எல்லாம் போனாலும்
அவன் புன்னகையை 
கொள்ளையிட முடியாது

உண்மை ஒரு நாள் ....

No comments:

Post a Comment